கூடலுார் நகராட்சி அரசு பள்ளிகளில் ஆய்வு
பெ.நா.பாளையம்; பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள கூடலுார் நகராட்சி அரசு பள்ளிகளில், பள்ளி கல்வி பாதுகாப்பு இயக்கத்தினர் ஆய்வு மேற்கொண்டனர்.கூடலுார் நகராட்சியில் உள்ள அரசு பள்ளிகளில் மாணவர்களின் கற்றல் திறன் மற்றும் கட்டமைப்பு வசதிகள் குறித்து, பள்ளி கல்வி பாதுகாப்பு இயக்கத்தினர் ஆய்வு மேற்கொண்டனர். ஒருங்கிணைப்பாளர் சந்திரசேகர் தலைமையில் வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் காளியண்ணன், சாந்தாராம், சரவணகுமார், சிமிலா, கருப்புசாமி, மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கருப்புசாமி, அரிட்டா புளோரி, நகர் மன்ற உறுப்பினர் பாலசுப்ரமணியன் ஆகியோர் கொண்ட குழுவினர் ஆய்வு செய்தனர்.இதில், மாணவர்களின் கற்றல் தரம் குறித்து தலைமை ஆசிரியை, ஆசிரியர்களிடம் கேட்டு அறிந்தனர்.