உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பள்ளியில் ஸ்மார்ட் உபகரணங்கள் சரியாக உள்ளதா? உறுதிப்படுத்த அறிவுறுத்தல்

பள்ளியில் ஸ்மார்ட் உபகரணங்கள் சரியாக உள்ளதா? உறுதிப்படுத்த அறிவுறுத்தல்

பொள்ளாச்சி: அரசு பள்ளிகளில் சிறார் திரைப்படம் திரையிடலுக்கு தேவையான கருவிகள் மற்றும் உபகரணங்கள் செயல்படும் நிலையில் இருப்பதை தலைமையாசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது. அரசு பள்ளிகளில் 6 முதல் 9ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு, சிறார் திரைப்படங்களை திரையிட அரசு ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி, பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில், திரைப்படங்களை விமர்சன ரீதியில் பார்ப்பது, திரைப்பட நுட்பங்களை அறிவது, ஊடக விழிப்புணர்வு மற்றும் விமர்சன சிந்தனையை வளர்த்தல் ஆகியவை மாணவர்களிடையே எடுத்துரைக்கப்படுகிறது. இதற்காக பொறுப்பாசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். நவ., மாதம் காக்கா முட்டை திரைப்படம் திரையிடப்பட்டது. இந்நிலையில், பள்ளி மாணவவர்களுக்கு திரையிடப்படும் திரைப்பட அனுபவங்கள் சரியான முறையில் சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும் என, தலைமையாசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது: ஒவ்வொரு ஆண்டும், 6 -முதல் 9ம் வகுப்பு வரையான அரசு பள்ளி மாணவர்களுக்கு, இலக்கிய, வினாடி - வினா, சிறார் திரைப்படம் மன்றங்களுக்கான போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதில் வெற்றி பெறுவோர் வெளிநாடு சுற்றுலா வாய்ப்பு பெறுகின்றனர். இதனால், இத்தகைய செயல்பாடுகளில் பங்கேற்க மாணவ, மாணவியர் ஆர்வம் காட்டுகின்றனர். திரையிடலுக்கு தேவையான கருவிகள் மற்றும் உபகரணங்கள் (ஸ்மார்ட் போர்டு, புரொஜெக்டர், ஒலிப்பெருக்கி, ஒலிவாங்கி, பென்டிரைவ்) உள்ளிட்டவை சரியாக இருப்பதை தலைமையாசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும். அவை பழுதாகி இருப்பின், உடனடியாக பழுது நீக்கி செயல்படும் நிலையில் வைத்திருக்க வேண்டும் என, தலைமையாசிரியர்கள் மற்றும் பொறுப்பாசிரியர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு, கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ