உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  வேலை வாய்ப்பு அலுவலகத்தில் ஒருங்கிணைந்த பயிற்சி வகுப்புகள்

 வேலை வாய்ப்பு அலுவலகத்தில் ஒருங்கிணைந்த பயிற்சி வகுப்புகள்

கோவை: குரூப் 2, 2ஏ முதன்மை போட்டி தேர்வுகளுக்கான ஒருங்கிணைந்த பயிற்சி வகுப்புகள், வரும் 10ம் தேதி முதல், மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடக்கிறது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில், குரூப் 2, 2ஏ வில், 645 காலிப்பணியிடங்களுக்கான முதல் நிலை தேர்வு செப்., 28ம் தேதி நடத்தி முடிக்கப்பட்டது. தற்போது கூடுதலாக 625 காலிப் பணியிடங்களுக்கான பிற்சேர்க்கை, கடந்த 18ம் தேதி வெளியிடப்பட்டது. குரூப் 2, 2ஏ முதன்மை போட்டி தேர்வுகளுக்கான ஒருங்கிணைந்த பயிற்சி வகுப்புகள், வரும் 10ம் தேதி முதல், காலை 10:30 மணி முதல் மதியம் 1:30 வரை, கோவை மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடக்கிறது. சிறப்பான பயிற்றுநர்களை கொண்டு, தமிழ் மற்றும் ஆங்கிலம் வழியில் நடக்கிறது. மையத்தில் ஸ்மார்ட் போர்டு, இலவச வைபை வசதி, அனைத்து போட்டி தேர்வுகளுக்கான புத்தகங்கள் அடங்கிய நுாலக வசதி உள்ளன. பயிற்சி வகுப்புகள், வாரத் தேர்வுகள், முழு மாதிரி தேர்வுகள் போன்றவற்றுடன் நடத்தப்பட உள்ளது. https://tamilnaducareerservices.tn.gov.inஎன்ற இணையத்தில் பதிவு செய்து இலவசமாக பாடக்குறிப்புகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விவரங்களுக்கு, மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரடியாகவோ அல்லது gmail.comஎன்ற மின்னஞ்சல் வாயிலாகவோ, 93615 76081 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொண்டு, பயனடையலாம் என, கலெக்டர் பவன்குமார் அழைப்பு விடுத்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை