உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பள்ளிகளுக்கு இடையிலான கோ--கோ; எம்.டி.என்., பியூச்சர் பள்ளி சாம்பியன்

பள்ளிகளுக்கு இடையிலான கோ--கோ; எம்.டி.என்., பியூச்சர் பள்ளி சாம்பியன்

சூலுார்; பள்ளிகளுக்கு இடையிலான கோ-கோ போட்டிகளில், எம்.டி.என்., பியூச்சர் பள்ளி அணிகள் சாம்பியன் கோப்பையை வென்றன. கோவை மாவட்ட கோ-கோ கழகம், காடாம்பாடி எம்.டி.என்., பியூச்சர் பள்ளி சார்பில், எம்.டி.என்., கோப்பைக்கான இரண்டாவது கோ-கோ போட்டி, பள்ளி வளாகத்தில் நடந்தது. 20க்கும் மேற்பட்ட பள்ளிகளை சேர்ந்த அணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். மாணவர்கள், மாணவிகள் பிரிவுக்கான இறுதி போட்டிகளை, பள்ளி தலைவர் பால தண்டபாணி, தாளாளர் பரிமளம், முதல்வர் மரகதம் மற்றும் மாவட்ட விளையாட்டு அலுவலர் புவனேஸ்வரி ஆகியோர் துவக்கி வைத்தனர். மாணவர்கள் பிரிவு இறுதி போட்டியில், எம்.டி.என்.,பள்ளியும், தியாகி என்.ஜி.ஆர்., பள்ளியும் மோதின. 28 - 18 என்ற புள்ளி கணக்கில் எம்.டி.என்., பள்ளி அணி சாம்பியன் கோப்பையை வென்றது. பெண்களுக்கான பிரிவில், எம்.டி.என்., பள்ளியும், டி.கே.எஸ்., பள்ளி அணியும் மோதின. இதில், 10--9 என்ற புள்ளி கணக்கில், எம்.டி.என்., பள்ளி வென்று, கோப்பையை பெற்றது. சிறப்பு விருந்தினர்கள் பிரதேவ் ஆதி வேல், தளபதி இளங்கோ ஆகியோர், வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பைகளை வழங்கினர். கோவை மாவட்ட கோ- கோ கழக செயலாளர் சிவக்குமார், மாவட்ட எறிபந்து கழக செயலாளர் தினேஷ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை