உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வாழைகளுக்கு இடையே ஊடுபயிராக செவ்வந்தி

வாழைகளுக்கு இடையே ஊடுபயிராக செவ்வந்தி

மேட்டுப்பாளையம்:மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில், தென்னை, வாழை விவசாயம் பிரதான தொழிலாக செய்யப்பட்டு வருகிறது. தற்போது வாழைகளுக்கு இடையே ஊடுபயிர் விவசாயம், அதிகமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.வாழைகளுக்கு இடையே செவ்வந்தி பூவை அதிக அளவில் விவசாயம் செய்து வருகின்றனர். இதனால் விவசாயிகளுக்கு இரட்டிப்பு லாபம் கிடைப்பதாக கூறுகின்றனர்.இதுகுறித்து விவசாயி ஒருவர் கூறுகையில், 'மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பவானி ஆறு முக்கிய நீர் ஆதாரமாக உள்ளது. வாழை, தென்னை விவசாயம் இங்கு நல்ல முறையில் மேற்கொள்ளப்படுகிறது. வாழைகளுக்கு இடையே செவ்வந்திப் பூ ஊடு பயிராக விளைய வைப்பதன் வாயிலாக இரட்டிப்பு லாபம் கிடைக்கிறது. விவசாயிகள் அதிக ஆர்வமுடன் ஊடு பயிர்களை விவசாயம் செய்து வருகின்றனர், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி