வைப்புகள் மீதான வட்டி விகிதம்; கூட்டுறவு வங்கியில் மாற்றம்
கோவை; கோவை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில், வைப்புகள் மீதான வட்டி விகிதம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.இதன்படி, வைப்புத் தொகை, ஏழு முதல் 14 நாட்களுக்கு, தனிநபர், மூத்த குடிமக்கள், கூட்டுறவு துறை நிறுவனங்கள், தனியார் மற்றும் அரசுத் துறை நிறுவனங்களுக்கு, 3.50 சதவீதம், 15 முதல் 45 நாட்களுக்கு, 3.75 சதவீதம் வழங்கப்படுகிறது.கடந்த 2ம் தேதி முதல், மாற்றியமைக்கப்பட்ட வட்டி விகிதமாக, 46 முதல் 90 நாட்களுக்கு 5 சதவீதம், 91 முதல் 180 நாட்களுக்கு 5.50 சதவீதம், 181 முதல் 364 நாட்களுக்கு, தனி நபர் மற்றும் கூட்டுறவு துறை நிறுவனங்கள், தனியார் மற்றும் அரசுத் துறை நிறுவனங்களுக்கு 6 சதவீதம், மூத்த குடிமக்களுக்கு 6.25 சதவீதம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 300 நாட்களுக்கு 7 சதவீதம், ஒரு வருட வைப்புகள் மீது, தனி நபர் மற்றும் கூட்டுறவு துறை நிறுவனங்கள், தனியார் மற்றும் அரசுத் துறை நிறுவனங்களுக்கு 8 சதவீதம், மூத்த குடிமக்களுக்கு 8.25 சதவீதம் வழங்கப்படுகிறது.ஒரு வருடத்துக்கு மேல், தனி நபர் மற்றும் கூட்டுறவு துறை நிறுவனங்கள், தனியார் மற்றும் அரசுத் துறை நிறுவனங்களுக்கு 7.50 சதவீதம், மூத்த குடிமக்களுக்கு 7.75 சதவீதம் வழங்கப்படுகிறது. 25 லட்சம் ரூபாய் மற்றும் அதற்கு மேல் உள்ள தொகைக்கு, மாற்றியமைக்கப்பட்ட வகையில், 8.25 சதவீதம் வழங்கப்படுகிறது. இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.