உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / உரிமைத் தொகை விண்ணப்பிக்க ஆர்வம்

உரிமைத் தொகை விண்ணப்பிக்க ஆர்வம்

மேட்டுப்பாளையம்; காரமடையில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நேற்று நடைபெற்றது. மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பிக்க பெண்கள் ஆர்வம் காட்டினர். தமிழக முதலமைச்சரின் சிறப்புத் திட்டமான உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் காரமடை நகராட்சி பகுதியில் உள்ள 27 வார்டுகளில் பல்வேறு கட்டங்களாக நடைபெற உள்ளன. இதன் ஒருபகுதியாக நேற்று, நகராட்சியின் 6, 9 மற்றும் 10 ஆகிய வார்டுகளுக்கு, காரமடை -மேட்டுப்பாளையம் சாலையில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் முகாம் நடைபெற்றது. நகராட்சி தலைவர் உஷா தலைமை வகித்தார். தாசில்தார் ராம்ராஜ், நகராட்சி கமிஷனர் மதுமிதா முன்னிலை வகித்தனர். மருத்துவ முகாமும் இதில் நடத்தப்பட்டன. மேலும், நகர்ப்புறப் பகுதியின் 13 அரசுத் துறைகளின், 43 சேவைகள் முகா மில் கலந்து கொண்டன. இம்முகாமில், மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பிக்க பெண்கள் அதிகம் ஆர்வம் காட்டினர். பெண்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு, வரிசைப்படி விண்ணப்பங்கள் வழங்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ