உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / இன்டீரியர், எக்ஸ்டீரியர் கண்காட்சி துவக்கம்

இன்டீரியர், எக்ஸ்டீரியர் கண்காட்சி துவக்கம்

கோவை; பாயன்ட் நிறுவனம் சார்பில், இன்டீரியர் மற்றும் எக்ஸ்டீரியர் 12வது ஆண்டு கண்காட்சி, அவிநாசி ரோடு, கொடிசியா தொழிற்காட்சி வாளாகத்தில் துவங்கியது. நாட்டின் அனைத்து பகுதிகளிலிருந்தும் முன்னணி கட்டுமான நிறுவனங்கள் மற்றும் இன்டீரியர், பர்னிச்சர், கட்டுமான பொருட்கள் தயாரிப்பாளர்கள் என 300க்கும் மேற்பட்டோர் ஸ்டால் அமைத்துள்ளனர். கோவை மாவட்ட அனைத்து கட்டுமான பொறியாளர்கள் சங்கத்தின் தலைவர் செவ்வேள், சிபாகா தலைவர் செந்தில், ரியல் எஸ்டேட் சங்க தேசிய செயலர் செந்தில்குமார் ஆகியோர் கண்காட்சியை துவக்கி வைத்தனர். நாளை வரை நடைபெறும் கண்காட்சியை பார்வையிட, அனுமதி இலவசம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ