சர்வதேச குற்றவியல் பாதுகாப்பு கருத்தரங்கு
கோவை; இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியின், குற்றவியல் பாதுகாப்புத் துறை மற்றும் கணினி அறிவியல் துறைகள் சார்பில், குற்றவியல் பாதுகாப்பு குறித்த சர்வதேச கருத்தரங்கு நடந்தது.கோவை பாயின்ட் பெர்பெக்ட் டெக்னாலஜிஸ் சர்வீசின் தலைவர் பிரேம்நாத் காசிநாத், அமெரிக்காவின் கிரேட் பஸ்ட் இயக்குனர் பர்ம் கே சோனி ஆகியோர், குற்றவியல் பாதுகாப்புத் துறை தொடர்பாகவும், இத்துறையின் வேலை வாய்ப்புகள் குறித்தும் மாணவர்களிடம் கலந்துரையாடினர். இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லுாரி மற்றும் கிரேட்பஸ்ட் மற்றும் பாயின்ட் பெர்பெக்ட் டெக்னாலஜிஸ் சர்வீஸ் அமைப்புகளுடன், புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.கல்லுாரியின் நிர்வாகச் செயலாளர் பிரியா, குற்றவியல் பாதுகாப்புத் துறைத் தலைவர் மரினால் எஸ்டாப் மற்றும் கணினி அறிவியல் துறை இணை பேராசிரியர் செல்வப்ரியா மற்றும் ஏராளமான மாணவ மாணவியர் பங்கேற்றனர்.