உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கோவையில் சர்வதேச ஆவணப்பட விழா

கோவையில் சர்வதேச ஆவணப்பட விழா

கோவை; கோவையில் நடக்கும் சர்வதேச ஆவணப்படவிழாவில், பல்வேறு நாடுகளில் இருந்து 60க்கும் மேற்பட்ட ஆவணப் படங்கள் திரையிடப்பட உள்ளன. ரத்தினம் கல்விக்குழும வளாக தலைவர் குணசேகரன் கூறியதாவது: கோவை ரத்தினம் கல்விக்குழுமம் மற்றும் நீலகிரி நெக்ஸ்ட் பவுண்டேஷன் இணைந்து, கோவை ஈச்சனாரி ரத்தினம் கல்லுாரியில், வரும் 30, 31ம் தேதிகளில், சர்வதேச ஆவணப்பட விழா நடத்தப்படுகிறது. செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் துவக்கி வைக்கிறார். ரத்தினம் கல்விக்குழும தலைவர் செந்தில், கல்விக்குழும இயக்குனர் ஷிமா செந்தில் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர். இதில், 20க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த 60க்கும் மேற்பட்ட ஆவணப் படங்கள் திரையிடப்பட உள்ளன. இதில், சுற்றுச்சூழல், சமுதாயம், பாரம்பரியம் குறித்த ஆவணப்படங்களாக இருக்கும். ஆவணப்பட தயாரிப்பாளர் அருண் வாடி பங்கேற்று, சிறந்த ஆவணப் படங்களை தேர்வு செய்ய உள்ளார். இதற்கு முதல் மூன்று பரிசுகள் வழங்கப்படுகின்றன. சிறந்த கதை, சிறந்த இயக்குனர் உட்பட பல்வேறு பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட உள்ளன. இதில், பொதுமக்கள், குறும்படம், ஆவணப்பட இயக்குனர்கள், நாளைய இயக்குனர்கள் என பலதரப்பினரும் பங்கேற்கலாம். அனுமதி இலவசம். இவ்வாறு, அவர் கூறினார்.முன்பதிவுக்கு: 93632 48955.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ