/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சர்வதேச கிராண்ட் மாஸ்டர் செஸ் போட்டி; நாட்டுக்கு பெருமை சேர்த்த கோவை வீரர்
சர்வதேச கிராண்ட் மாஸ்டர் செஸ் போட்டி; நாட்டுக்கு பெருமை சேர்த்த கோவை வீரர்
கோவை; ஒடிசாவில் நடந்த சர்வதேச கிராண்ட் மாஸ்டர் செஸ் போட்டியில், கோவையை சேர்ந்த இனியன் மூன்றாம் இடம் பிடித்து, பெருமை சேர்த்துள்ளார்.ஒடிசா மாநிலம், புவனேஸ்வரில், 14 கிராண்ட் மாஸ்டர்கள், 22 சர்வதேச மாஸ்டர்கள் உட்பட, 20 நாடுகளை சேர்ந்த, 177 போட்டியாளர்கள் பங்கேற்ற, ஓபன் சர்வதேச கிராண்ட் மாஸ்டர் செஸ் போட்டி எட்டு நாட்கள் நடந்தது.10 சுற்றுகளாக நடைபெற்ற இத்தொடரில் ஆறு வெற்றி, மூன்று 'டிரா' மற்றும் ஒரு தோல்வி என, 7.5 புள்ளிகளுடன் கிராண்ட் மாஸ்டர் இனியன் மூன்றாம் இடம் பிடித்தார்.வியட்நாம் நாட்டு வீரர் ங்குயேன் குக் முதலிடமும், பெலாரஷின் கிராண்ட் மாஸ்டர் அலெக்ஸ்யி பெடோரோவ் இரண்டாம் இடமும் பிடித்தனர். இனியன், ஈரோட்டை பூர்வீகமாக கொண்டு, கோவையில் வசிப்பவர்.