உற்பத்திப் பொருளை உன்னத பொருளாக மாற்றும் இன்டெரோ
கோ வையில் செயல்பட்டு வரும் இன்டெரோ பேக்கேஜிங் நிறுவனம், கடந்த 22 ஆண்டுகளாக தொழில் மற்றும் உணவு துறைக்கான பேக்கேஜிங் இயந்திரங்களை உருவாக்கி வருகிறது என்று அதன் இயக்குநர் தேவக்குமார் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறியதாவது: சென்னை, கொச்சி, கோவை, மதுரை, திருச்சி, கோழிக்கோடு போன்ற விமான நிலையங்களில் பயன்படும் பேக்கேஜிங் இயந்திரங்களை எங்கள் நிறுவனம் உருவாக்கியுள்ளது. முன்னர் வெளிநாட்டு இயந்திரங்களையே பயன்படுத்தியிருந்த நிலையிலிருந்து, இப்போது உள்நாட்டு இயந்திரங்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள பல்வேறு தொழில் நிறுவனங்களுக்கு, வங்கிகளில் நோட்டுகள் கட்டுவதற்கும், பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லுாரிகளுக்கும் எங்கள் இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. 152 வகையான பேக்கேஜிங் தீர்வு இயந்திரங்கள் எங்களிடம் விற்பனைக்கு உள்ளன. இவை ரூ.7,000 முதல் ரூ.15 லட்சம் வரையிலான விலையில் கிடைக்கின்றன. பிளாஸ்டிக் மறு சுழற்சி பொருட்கள் மற்றும் மக்கும் வகை பொருட்கள் பயன்படுத்தும் வசதியுடைய இயந்திரங்களையும் உற்பத்தி செய்து வருகிறோம். பழங்குடியின மக்களுக்கான சிறப்பு முயற்சியாக, அவர்களின் பொருட்களுக்கு மதிப்பு கூட்டி விற்பனை செய்ய எங்கள் இயந்திரங்களை வழங்கியுள்ளோம். இதற்காக விருதும் பெற்றுள்ளோம். எளியவர்களும் எங்கள் இயந்திரங்களை எளிதாக பயன்படுத்தக்கூடியவாறு வடிவமைக்கப்பட்டுள்ளன. உணவு துறையில், இட்லி மாவு, தானியங்கள், மற்றும் பல்வேறு உணவுப் பொருட்கள் ஆகியவற்றை வெற்றிட பைகளில் அடைக்கக்கூடிய இயந்திரங்களும் எங்களிடம் உள்ளன. கல்லுாரி மாணவர்களுக்கு எங்கள் நிறுவனத்தில் பயிற்சிகள் வழங்கி, அவர்களை சிறந்த தொழில் முனைவோராக உருவாக்க முயற்சி செய்து வருகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.