மேலும் செய்திகள்
சத்துணவு ஊழியர் பதவிக்கு வரும் 16ல் நேர்காணல்
10-Jun-2025
பெ.நா.பாளையம் : பெரியநாயக்கன்பாளையம் ஒன்றிய அலுவலகத்தில் சத்துணவு உதவியாளர் பணிக்கான நேர்காணல் நடந்தது.பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதியில், 72 அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் உள்ளன. இதில் உள்ள, 31 சத்துணவு மையங்களில் காலியாக உள்ள சத்துணவு உதவியாளர் பணிக்கான நேர்காணல் நேற்று பெரியநாயக்கன்பாளையம் ஒன்றிய அலுவலகத்தில் நடந்தது. இதில், கோவை மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) பாலமுருகன் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்று நேர்காணலை நடத்தினர். இதில் தகுதி வாய்ந்த, 107 பேர் கலந்து கொண்டனர்.
10-Jun-2025