மேலும் செய்திகள்
அங்கன்வாடி காலி பணியிடம் 8,048 பேரிடம் நேர்காணல்
28-May-2025
பொள்ளாச்சி, ; பொள்ளாச்சியில், காலியாக உள்ள அங்கன்வாடி பணியிடங்களை, நிரப்ப நேர்காணல் நடந்தது.கோவை மாவட்டத்தில், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டத்தின் கீழ், செயல்படும், குழந்தை வளர்ச்சி திட்டத்தின் 18 அலுவலகங்களில் காலியாக உள்ள, 13 அங்கன்வாடி பணியாளர்கள், 23 குறு அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் 101 அங்கன்வாடி உதவியாளர்கள் பணியிடங்கள் நேர்முகத் தேர்வு வாயிலாக இன சுழற்சி முறையில் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டது.பெண்களிடம் மட்டும் விண்ணப்பங்கள் கோரப்பட்டன. அவ்வகையில், பொள்ளாச்சி வடக்கு ஒன்றியம், தெற்கு ஒன்றியத்தில் காலியாக இருந்த 2 பணியாளர், 4 உதவியாளர் பணியிடத்திற்கு, பள்ளி மாற்று சான்றிதழ், எஸ்.எஸ்.எல்.சி., மற்றும் பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ், ரேஷன்கார்டு, ஆதார்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றின் நகல்களில் சுயசான்றொப்பமிட்டு பலர் விண்ணப்பித்திருந்தனர்.சின்னாம்பாளையத்தில் உள்ள ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகத்தில் நேர்காணல் நடந்தது. அதில், 35க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். கலெக்டரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு), ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி மாவட்ட திட்ட அலுவலர் தேவிகுமாரி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் வீணா, வட்டார மருத்துவ அலுவலர்கள் ராஜ்குமார், சாலினி, உள்ளிட்டோர் நேர்காணல் நடத்தினர்.
28-May-2025