உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / எல்ஜி நிறுவனத்தின் புதிய ஏர் கம்ப்ரசர் அறிமுகம்

எல்ஜி நிறுவனத்தின் புதிய ஏர் கம்ப்ரசர் அறிமுகம்

கோவை : 64 ஆண்டுகளுக்கு மேலாக ஏர் கம்ப்ரசர் துறையில் முன்னணி நிறுவனமாக செயல்பட்டு வரும் எல்ஜி நிறுவனம், ஏர் கம்ப்ரசர் செயல்பாட்டில் புரட்சியை ஏற்படுத்தும் புதிய டேபிலைசார் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.தொழிற்சாலைகளில் மாறும் காற்றழுத்த தேவைக்கேற்ப கம்ப்ரசர் செயல்பாட்டை மேம்படுத்த, டேபிலைசார் தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டுள்ளது. இது, நிலையற்ற செயல்திறன், குறைந்த செயல்திறன், அடிக்கடி லோட், அன்லோட் ஆகும் போது ஏற்படும் அதிக சிதைவு போன்ற பிரச்னைகளை தீர்க்க வடிவமைக்கப்பட்டுள்ளது என எல்ஜி எக்கியூப்மென்ட்ஸ் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் ஜெயராம் வரதராஜ் தெரிவித்தார்.டேபிலைசார் தொழில்நுட்பம் தொழில்துறை உற்பத்தி முறைகளை மேலும் பசுமையாக மாற்றுவதுடன், செலவை குறைப்பதற்கு உகந்ததாகவும இருக்கும். தொழிற்சாலைகளின் பல்வேறு தேவைகளுக்கேற்ப, புதிய தொழில்நுட்பம் 2025ம் ஆண்டு முதல் இந்தியாவில் மற்றும் உலகளவில் லைட் மற்றும் ஹெவி என இரண்டு பதிப்புகளில் கிடைக்கும் என்று எல்ஜி எக்கியூப்மென்ட்ஸ் நிறுவனத்தின் தொழில்நுட்ப இயக்குனர் வேணு மாதவ் தெரிவித்தார்.எல்.ஜி., நிறுவனத்தின் மேம்பட்ட காற்றழுத்தத் தீர்வுகள் குறித்த மேலும் தகவல்களை, www.elgi.comஎன்ற இணையத்தில் தெரிந்துகொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ