மேலும் செய்திகள்
மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்
30-Nov-2024
அன்னுார்; அன்னுார் கரிவரதராஜ பெருமாள் கோவிலில், கும்பாபிஷேக ஆண்டு விழா மற்றும் திருக்கல்யாணம் நாளை (3ம் தேதி) நடக்கிறது.அன்னுார், கரிவரதராஜ பெருமாள் கோவில், 200 ஆண்டுகள் பழமையானது. இக்கோவிலில், பல கோடி ரூபாய் செலவில், திருப்பணிகள் செய்யப்பட்டு, கடந்த ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது.இதையடுத்து, கும்பாபிஷேக முதலாம் ஆண்டு விழா மற்றும் திருக்கல்யாண உற்சவம் நாளை (3ம் தேதி) நடக்கிறது. அதிகாலை 5:30 மணிக்கு, திருப்பள்ளி எழுச்சியும், திருப்பாவை பாடும் நிகழ்ச்சியும், திருமஞ்சனமும் நடக்கிறது.காலை 10:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரை, ஹோமம், திருக்கல்யாணம், திருமாங்கல்ய தாரணம் நடைபெறுகிறது. காரமடை வேதவியாச சுதர்சன பட்டர் தலைமையில் வேள்வி பூஜைகள் நடைபெறுகிறது.விழாவில் பங்கேற்று இறையருள் பெற விழா குழுவினர் அழைப்பு விடுத்துள்ளனர்.
30-Nov-2024