உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மரக்கன்றுகள் பெற அழைப்பு

மரக்கன்றுகள் பெற அழைப்பு

அன்னுார் : அன்னுாரில் இன்று மரம் வளர்ப்பு திட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி நடக்கிறது.கோவை வனவியல் விரிவாக்க கூட்டம் சார்பில், காலநிலை மாற்றத்திற்கான தமிழ்நாடு உயிர் பன்மை பாதுகாப்பு மற்றும் பசுமையாக்கல் திட்டத்தின் கீழ், மரம் வளர்ப்பு திட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று (18ம் தேதி) அன்னுார், மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள சரவணா ஹாலில் காலை 10 : 00 மணி முதல், மதியம் 12 : 00 மணி வரை நடைபெறுகிறது.நிகழ்ச்சியை, வனவியல் விரிவாக்க அலுவலர் விஜயகுமார் துவக்கி வைக்கிறார். வனச்சரக அலுவலர் ஜெயச்சந்திரன் பேசுகிறார். சுற்றுச்சூழலில் மரத்தின் பங்கு குறித்து ராம் மோகனும், திட்டம் குறித்து கோவிந்தராஜிம் பேசுகின்றனர்.'கூட்டத்தில் முன்பதிவு செய்து மரக்கன்றுகளை இலவசமாக பெறலாம்,' என நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை