அரசு விடுதியில் சேர மாணவியருக்கு அழைப்பு
அன்னுார்: அரசு மாணவியர் இலவச விடுதியில் சேர அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அன்னுார் பேரூராட்சியில் உள்ள சொக்கம்பாளையத்தில், அரசு உதவி பெறும் தேசிய வித்யாசாலை துவக்கப்பள்ளியும், காந்திஜி அரசு மேல்நிலைப் பள்ளியும் உள்ளன. பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவியருக்கென இரண்டு அரசு விடுதிகள் இங்கு செயல்பட்டு வருகின்றன. இந்த விடுதிகளில் இந்த ஆண்டுக்கான மாணவியர் சேர்க்கை துவங்கி உள்ளது. இந்த விடுதியில் நூலகம் உள்ளது. பொழுதுபோக்கு விளையாட்டு உபகரணங்கள் உள்ளன. காலை, மதியம், இரவு சுவையான உணவு வழங்கப்படுகிறது. மூன்று மாதங்களுக்கு ஒரு முறை அரசு மருத்துவர்கள் மூலம் மருத்துவ பரிசோதனை முகாம் நடத்தப்படுகிறது.நான்காம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவியர் இந்த விடுதிகளில் சேர்க்கப்படுவார்கள். எந்த கட்டணமும் செலுத்த தேவையில்லை. ஆண்டு வருமானம் 2 லட்சம் ரூபாயை விட குறைவாக உள்ள பெற்றோரின் குழந்தைகளை இந்த விடுதியில் சேர்க்கலாம். மேலும் விவரங்களுக்கு 95782 20299 என்னும் மொபைல் எண்ணை தொடர்பு கொள்ளலாம்,' என தெரிவிக்கப்பட்டுள்ளது.