மேலும் செய்திகள்
நிதி ஆதாரம் வழங்க கோரி ஆழியாறு திட்டக்குழு மனு
13-Aug-2025
- நமது நிருபர் -பி.ஏ.பி., யில் ஒரு சுற்றுக்கு ஐந்து நாட்களுக்குப் பதிலாக, ஏழு நாள் தண்ணீர் விட வேண்டும் என பாசனசபையினர் வலியுறுத்தியுள்ளனர். பி.ஏ.பி., பெருந்தொழுவு இரண்டு கிளை கால்வாய் நீரை பயன்படுத்தும் விவசாயிகள் ஆலோசனைக் கூட்டம் பெருந்தொழுவில் நடந்தது. இதில் ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்; கடைமடை வரை அதிக தண்ணீர் விட வேண்டும்; ஒரு சுற்றுக்கு ஐந்து நாட்களுக்குப் பதிலாக ஏழு நாள் தண்ணீர் விட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பகிர்மான குழு தலைவர் ஈஸ்வரமூர்த்தி, பாசன சபை தலைவர்கள் முத்துசாமி, சுப்பிரமணி, முன்னாள் தலைவர் நடராஜ், செந்தில், ஆட்சி மன்ற குழு உறுப்பினர்கள் தங்கவேல், மூர்த்தி, பாலசுப்ரமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
13-Aug-2025