உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அறிவிப்பு பலகை என்றாலே அதிகாரிகளுக்கு ஜுரமா?

அறிவிப்பு பலகை என்றாலே அதிகாரிகளுக்கு ஜுரமா?

ஒளிரா விளக்கு

மாநகராட்சி 45-வது வார்டு, கே.கே.புதுார் அழகண்ணன் வீதியில் ஓராண்டாக தெருவிளக்கு எரியாமல் உள்ளது. –குமார், கே.கே.புதூர்.

சேரன் மாநகர்

சசி மேற்கு அவென்யூவில் 15 நாட்களாக பில்லர் எண் 50, 51-ல் உள்ள தெருவிளக்குகள் எரியாமல் உள்ளன. பாம்பு நடமாட்டம் அதிகம் உள்ளதால் அச்சம் ஏற்படுகிறது. சில இடங்களில் தெருவிளக்குகள் இரவு, பகல் என தொடர்ந்து எரிந்து கொண்டிருக்கிறது. –ராஜாராம், சேரன் மாநகர்.

குப்பை குவியல்

சிங்காநல்லுார், எஸ்.ஐ.எச்.எஸ்., காலனி, ஜெ.ஜெ. நகர், பிரதான நுழைவாயிலின் இருபுறமும் குப்பை கொட்டப்படுகிறது. சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. –மோகன் பிரசாத், சிங்காநல்லுார்.

பேரூர்

பேரூர் பாலம் அருகே, குப்பை கொட்டக்கூடாது என எச்சரிக்கப்பட்ட இடத்திலேயே குப்பை கொட்டப்படுகிறது. –ஜோதி, பேரூர்.

உடைந்த பெயர் பலகை

ஸ்ரீ குமரன் மாநகர், விளாங்குறிச்சி ரோட்டில், உள்ள தெரு பெயர் பலகை உடைந்து தொங்கிக் கொண்டுள்ளது. புதிதாக வருவோர் சிரமப்படுகின்றனர். –சம்பத், சரவணம்பட்டி.

அடிப்படை வசதி இல்லை

இடையர்பாளையம் காந்தி நகர், விவேகானந்தர் வீதியில் தார் ரோடு, பாதாள சாக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை. கொசு மருந்தும் முறையாக அடிப்பதில்லை. –உமா மகேஸ்வரி, விவேகானந்தர் வீதி.

சேதமான மின்கம்பம்

சின்னவேடம்பட்டி, வஞ்சியம்மன் நகரில் உள்ள மின்கம்பம் 2 ஆண்டுக்கும் மேலாக சேதமடைந்து, விழும் நிலையில் உள்ளது. மக்கள் அச்சத்துடன் நடக்க வேண்டி உள்ளது. –சுபாஷ் கிருஷ்ணன், வஞ்சியம்மன் நகர்.

சாலை தடுப்பு சேதம்

திருச்சி சாலையில் பல பகுதிகளில் சாலையின் மையப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தடுப்புகள் சேதமடைந்த நிலையில் காணப்படுகின்றன. –சபரி, சிங்கநல்லுார்.

பாலத்தில் கேபிள் ஒயர்

சிங்காநல்லுார் மேம்பாலத்தில் கேபிள் ஒயர்கள் முறையாக அகற்றப்படாமல், மேம்பாலத்தை ஆக்கிரமித்தபடி காணப்படுகின்றன. –கணேசன், சிங்காநல்லுார்.

திறந்திருக்கும் மின் பெட்டி

டி.கே. மார்க்கெட் பகுதியில் உள்ள டிரான்ஸ்பார்மர் மின் பெட்டி பாதுகாப்பின்றி திறந்த நிலையில் இருக்கிறது. –சிவனேஷன்,டி.கே. மார்க்கெட்.

தண்ணீர் பந்தல்

ரயில்வே மேம்பாலம் பணியால், தண்ணீர் பந்தல் ‘எஸ்’ பெண்ட்டில் இருந்து டைடல் பார்க் செல்லும் ரோட்டில் வாகனங்கள் செல்ல முடியாது. அறிவிப்பு பலகை இல்லாததால் வாகன ஓட்டிகள் அவதி படுகின்றனர். அறிவிப்பு பலகை என்றால் அதிகாரிகளுக்கு ஜுரமா? –திருப்பதிசாமி, காந்தி மாநகர்.

நாறும் பஸ் ஸ்டாண்ட்

காந்திபுரம் நகர பஸ் ஸ்டாண்டின் கிழக்கிலும், வடக்கிலும் ஆண்கள் கழிவறை உள்ளது. சுத்தம் செய்வதே இல்லை. தாங்க முடியாத நாற்றம். நமக்கெல்லாம் கிளீன்சிட்டி; கிரீன்சிட்டி கோஷம் தேவையா? – ஸ்டீபன் ஹாக், வெள்ளலுார்.

வேகத்தடை வேண்டும்

வடவள்ளி– இடையர்பாளையம் சாலையில் சின்னம்மா நகரில் தனியார் பள்ளிக்குச் செல்லும் சாலையில் அதிவேகத்தில் வாகன ஒட்டிகள் செல்வதால் தினமும் விபத்து நடக்கிறது. வேகத்தடை அமைக்க வேண்டும். –விஜய்குமார், வடவள்ளி.

அறிவிப்பு இல்லாத அவதி

போலீஸ் குவார்டர்சில் இருந்து சத்தி ரோடு செல்லும் ஒரு கி.மீ. வீதியின் கடைசிக்கு போன பிறகுதான் தெரிகிறது, கால்வாய் வேலைக்காக தெரு மூடப்பட்டிருப்பது. வாகனம் திருப்ப கூட வழி இல்லை. தெரு துவக்கத்தில் ஒரு எச்சரிக்கை பலகை வைக்க அதிகாரிகளுக்கு தோன்றவில்லையா? –கணேசன், விநாயகபுரம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ