மேலும் செய்திகள்
ஊட்டச்சத்து மாதம் அரும்பாக்கத்தில் விழிப்புணர்வு
28-Sep-2024
கோவை : ரேஷன் கடையில் வழங்கப்பட்ட அரிசியில், பிளாஸ்டிக் அரிசி கலந்துள்ளதாக வெளியாகி, பொதுமக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.இந்தியாவில் பிறக்கும் 36 சதவீதம் குழந்தைகள், ஊட்டச்சத்து குறைபாடுடனும், 32 சதவீத குழந்தைகள் எடைக் குறைவாகவும் பிறப்பதாக, தேசிய குடும்ப நல அமைப்பின் கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது. இதை கருத்தில் கொண்டு, இந்திய உணவு கழகம் வாயிலாக, செறிவூட்டப்பட்ட ஊட்டச்சத்து அரிசி, ரேஷன் அரிசியில் கலந்து வழங்கப்பட்டு வருகிறது.இந்நிலையில், கோவை வெரைட்டிஹால் ரோடு திருமால் வீதியில் உள்ள, ரேஷன் கடையில் ரேஷன் கார்டுதாரர்கள் வாங்கிய அரிசியில், பிளாஸ்டிக் அரிசி கலந்து இருப்பதாக, கார்டுதாரர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.இது குறித்து, பொது வினியோகத் திட்ட துணைப்பதிவாளர் ராஜேந்திரன் கூறுகையில், ''மத்திய அரசு வழங்கும் அரிசியில், மக்கள் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு, 100 கிலோவுக்கு ஒரு கிலோ செறிவூட்டப்பட்ட ஊட்டச்சத்து அரிசி கலந்து வழங்கப்படுகிறது.இந்த அரிசி, தண்ணீரில் போட்டவுடன் மிதக்கும். நனைந்து அரிசி ஊறியவுடன் அமிழ்ந்து விடும். இது தெரியாமல் மக்கள் அச்சப்படுகின்றனர்.சிலர் இதை, பிளாஸ்டிக் அரிசி என வதந்தியை கிளப்பி விடுகின்றனர். பொதுமக்கள் நம்ப வேண்டாம். அந்த அரிசியை சாப்பிட்டால் உடல் நலத்துக்கு நல்லது,'' என்றார்.
அரிசியை மாவாக அரைத்து, அத்துடன் விட்டமின் பி 12, போலிக் ஆசிட் மற்றும் அயன் கலந்து செறிவூட்டி, அதை மீண்டும் அரிசி வடிவத்தில் உருவாக்கி, 100 கிலோ அரிசியில் ஒரு கிலோ கலந்து, பொது வினியோகத்துக்கு வழங்கப்படுகிறது. இந்த அரிசியை சமைத்து உண்பதன் வாயிலாக, கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகளுக்கு போதிய ஊட்டச்சத்து கிடைக்கும் என, இந்திய உணவு கழகம்தெரிவித்துள்ளது.
28-Sep-2024