உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அவிநாசி ரோடு மேம்பாலம் தரமா இருக்கா? நெடுஞ்சாலை ஆராய்ச்சி இயக்குனர் நேரில் ஆய்வு

அவிநாசி ரோடு மேம்பாலம் தரமா இருக்கா? நெடுஞ்சாலை ஆராய்ச்சி இயக்குனர் நேரில் ஆய்வு

கோவை; கோவை - அவிநாசி ரோட்டில், உப்பிலிபாளையம் முதல் கோல்டுவின்ஸ் வரை, 10.1 கி.மீ., துாரத்துக்கு கட்டப்படும் மேம்பாலம் தரமாக இருக்கிறதா என, நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலைய இயக்குனர் சரவணன் நேற்று ஆய்வு செய்தார். கோவை - அவிநாசி ரோட்டில், உப்பிலிபாளையம் முதல் கோல்டுவின்ஸ் வரை, 10.1 கி.மீ., துாரத்துக்கு, மாநில நெடுஞ்சாலைத்துறை (சிறப்பு திட்டங்கள்) மூலம் மேம்பாலம் கட்டப்படுகிறது. பாலம் கட்டுமான பணிகளை, சென்னை நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிறுவன இயக்குனர் சரவணன், நேற்று ஆய்வு செய்தார். சின்ன, சின்ன திருத்தங்களை கூறினார். இயக்குனர் சரவணன் கூறுகையில், ''கட்டுமான பணிகள் தரமாக இருக்கின்றன. வாகன ஓட்டிகள் வரும்போது, துாரத்திலேயே வளைவு இருப்பது தெரிய வேண்டும்; அருகாமையில் வந்தபின் தெரியக்கூடாது; அதற்கான திருத்தங்களை கூறியிருக்கிறோம். சாலை பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யச் சொல்லியிருக்கிறோம். மேம்பாலம் பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கு முன், சாலை பாதுகாப்பு அடிப்படையில், மீண்டும் ஆய்வு செய்யப்படும்,'' என்றார்.கண்காணிப்பு பொறியாளர் ஜெயலட்சுமி, சிறப்பு திட்ட கோட்ட பொறியாளர் சமுத்திரக்கனி, தரக்கட்டுப்பாடு கோட்ட பொறியாளர் சித்ரா, சிறப்பு திட்ட உதவி கோட்ட பொறியாளர் மகேஸ்வரி மற்றும் பலர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி