உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஈஷா கிராமோத்சவம் எனும் கிராமப்புற விளையாட்டு விழா வரும் 16ல் துவக்கம்

ஈஷா கிராமோத்சவம் எனும் கிராமப்புற விளையாட்டு விழா வரும் 16ல் துவக்கம்

தொண்டாமுத்தூர்; ஈஷா அறக்கட்டளை சார்பில், ஆண்டுதோறும் 'ஈஷா கிராமோத்சவம்' என்ற கிராமப்புற விளையாட்டு திருவிழா, பிரம்மாண்டமாக நடந்து வருகிறது. இந்தாண்டு, 'ஈஷா கிராமோத்சவம் 2025' விளையாட்டு போட்டிகள் இம்மாதம் 16ம் தேதி துவங்குகிறது. இதில் ஆண்களுக்கான வாலிபால், பெண்களுக்கான த்ரோபால் போட்டிகள் நடத்தப்பட உள்ளன. தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தெலுங்கானா, மற்றும் முதல் முறையாக ஒடிசா உள்ளிட்ட 6 மாநிலங்களிலும், யூனியன் பிரதேசமான புதுச்சேரியிலும் இந்த போட்டிகள் நடைபெறவுள்ளன. இதில் 30,000க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து 6,000க்கும் மேற்பட்ட அணிகள் மூலம் 50,000க்கும் மேற்பட்ட கிராம மக்கள் விளையாட இருக்கின்றனர். ஆறு மாநில அணிகளுக்கு இடையிலான இறுதிப்போட்டிகள், செப் டம்பர் 21ம் தேதி, கோவை ஈஷாவில் உள்ள ஆதியோகி வளாகத்தில் நடைபெற உள்ளது. இறுதிப் போட்டிகளில் மாற்று திறனாளிகளுக்கான பாரா வாலிபால் போட்டியும் நடைபெறும். இப்போட்டிகளில் ஒரே கிராமத்தை சேர்ந்த மக்களால் மட்டுமே அணிகள் உருவாக்க முடியும். தொழில்முறை வீரர்கள் அணிகளில் இடம்பெற முடியாது. கிராமப்புற அணிகள் இலவசமாக பங்கேற்கலாம். முன்பதிவு செய்வது கட்டாயம். முன்பதிவுக்கு , isha.co/gramotsavam என்ற இணையதளம் மூலமும், 83000 30999 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.

பரிசுத்தொகை

ஈஷா கிராமோத்சவ விளையாட்டு போட்டிகளின் 3 நிலைகளிலும் பரிசுத் தொகைகள் வழங்கப்பட உள்ளன. அந்த வகையில் முதல் நிலை போட்டிகளில் முதல் நான்கு இடங்களை வெல்லும் அணிகளுக்கு முறையே 10,000, 7,000, 5,000 மற்றும் 3,000 பரிசுத்தொகையாக வழங்கப்பட உள்ளன. மண்டல அளவில் நடைபெறும் போட்டிகளில் முதல் நான்கு இடங்களில் வெற்றி பெறும் அணிகளுக்கு முறையே 12,000, 8,000, 6,000 மற்றும் 4,000 பரிசுத்தொகையாக வழங்கப்பட உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை