உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வேலையே முடியலை... அதுக்குள்ளயா!

வேலையே முடியலை... அதுக்குள்ளயா!

கோவை: சத்தி ரோடு விரிவாக்கம் மற்றும் மழை வடிகால் பணியை நெடுஞ்சாலைத்துறை செய்து வருகிறது. குறுகலான ரோடு என்பதாலும், பணி மந்தமாக நடப்பதாலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. வேலையை விரைந்து முடிக்க மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். நவம்பருக்குள் முடிக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.  போக்குவரத்தை எளிதாக்குவதற்கு தான் சத்தி ரோடு விரிவாக்கம் செய்யப்படுகிறது. பணி நிறைவடைவதற்கு முன்பாகவே, ரோட்டில் இரு புறமும் பைக்குகளை பார்க்கிங் செய்து செல்கிறார்கள். போக்குவரத்து நெரிசல் மேலும் அதிகரிக்கிறது. விரிவாக்க பணிக்கும், போக்குவரத்துக்கும் தொந்தரவாக பார்க்கிங் செய்வதை போக்குவரத்து போலீஸ் தடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை