உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வாகன விபத்தில் ஐ.டி., ஊழியர் பலி

வாகன விபத்தில் ஐ.டி., ஊழியர் பலி

கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு அருகே, தேசிய நெடுஞ்சாலையில் நடந்த வாகன விபத்தில், தனியார் ஐ.டி., நிறுவன ஊழியர் பலியானார். பொள்ளாச்சி, பெரியாக்கவுண்டனூரை சேர்ந்தவர் ஜெயராமன், 26, கோவையில் உள்ள தனியார் ஐ.டி., நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவர், உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நேற்று காலை கோவை நோக்கி பைக்கில் சென்றார். கிணத்துக்கடவு, கல்லாங்காட்டுபுதூர் அருகே சென்ற போது, பொள்ளாச்சி, ஆவல்சின்னாம்பாளையத்தை சேர்ந்த உதயகுமார் என்பவர் ஓட்டிச் சென்ற லாரியை, எவ்வித சிக்னலும் செய்யாமல், 'யு டேர்ன்' பகுதியில் திரும்பினார். இதனால், ஜெயராமன் நிலை தடுமாறியதில், பைக் கட்டுப்பாட்டை இழந்து லாரியில் மோதியது. விபத்தில், 50 மீட்டர் தொலைவுக்கு ரோட்டில் பைக் உரசி சென்றதில் தீ பிடித்து முழுவதும் எரிந்தது. படுகாயமடை ந் த ஜெயராமனை, பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், வழியிலேயே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். விபத்து குறித்து, கிணத்துக்கடவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி