உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மிகவும் பயனுள்ளதாக இருந்தது மாணவ, மாணவியர் மகிழ்ச்சி

மிகவும் பயனுள்ளதாக இருந்தது மாணவ, மாணவியர் மகிழ்ச்சி

கோவையில் நடந்த 'தினமலர்' வழிகாட்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவர்கள், நிகழ்ச்சி மிகவும் பயனுள்ளதாக இருந்ததாக மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.'முழுமையான தகவல்கள்'துறை சார்ந்த தகவல்களை அறிந்துகொள்ளும் நோக்கில் இந்நிகழ்வில் பங்கேற்றேன். பல்வேறு புதிய தகவல்களை தெரிந்துகொண்டேன். கல்விக்கடன் சார்ந்த முழுமையான தகவல்களும் தெரிந்துகொள்ள முடிந்தது.-ஹர்ஷினி, கோவில்பாளையம்'ஒரே இடத்தில் அனைத்தும்'பயோ மெடிக்கல் இன்ஜினியரிங் துறையை தேர்வு செய்ய முடிவு செய்துள்ளேன். ஆன்லைனில் பல கல்லுாரிகளில் இந்த பாடப்பிரிவு உள்ளதா என, தேடினோம். இங்கு, ஒரே இடத்தில் இத்துறை உள்ள கல்லுாரிகளை நேரடியாக பேசி, விபரங்களை தெரிந்துகொண்டோம். மிகவும் பயனுள்ள நிகழ்வாக இருந்தது.- ராகவி, சுந்தராபுரம்'நுணுக்கமான விபரங்கள்'மருத்துவ படிப்பு எடுக்கவுள்ளேன். நீட்., தேர்வுக்கு தயாராவது குறித்து சில நுணுக்கமான தகவல்களை தெரிந்துகொண்டேன். நீட்., இல்லாமலும், பல்வேறு மருத்துவ படிப்புகள் இருப்பதை அறிந்துகொள்ள முடிந்தது.- பிரஜின், திருப்பூர்'சந்தேகம் தீர்ந்தது'மூன்று நாள் நிகழ்வில், இரண்டு நாட்கள் முழுமையாக பங்கேற்று வல்லுநர்கள் தகவல்களை தெரிந்துகொண்டேன். தொழில்நுட்பம் குறித்து நான் எதிர்பார்த்ததை விட அதிகம் தெரிந்துகொள்ள இந்நிகழ்வு உதவியாக இருந்தது. கல்விக்கடன் குறித்து எனக்கு இருந்த அனைத்து சந்தேகங்களுக்கும் விடை கிடைத்தது.- ரமணபாரதி, திருப்பூர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ