உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / இந்த வாரம் முழுக்க சாரல் மழை பெய்யும்

இந்த வாரம் முழுக்க சாரல் மழை பெய்யும்

பொள்ளாச்சி; கோவை மாவட்டத்தில், வரும் 5ம் தேதி வரை மேகமூட்டமும், லேசானசாரல்மழைபெய்யும்என, வேளாண் பல்கலை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.கோவை மாவட்டத்தில், கடந்த மூன்று வாரங்களாக கனமழை பெய்கிறது. இதனால், பாசன பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது. பொள்ளாச்சி சுற்றுப்பகுதிகளில் விவசாய தோட்டங்களில் தேங்கிய மழை நீரை விவசாயிகள் வடிகால் வசதி ஏற்படுத்தி வெளியேற்றி வருகின்றனர்.கடந்த இரு நாட்களாக மழை பொழிவின்றி உள்ளது. இந்நிலையில்,இன்று முதல் வரும் 3ம் தேதி வரை, பொதுவாக வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஆங்காங்கு லேசானசாரல்மழைப்பொழிவு இருக்கும். வரும் 4, 5ம் தேதிகளில் மழைப்பொழிவு இருக்கும்,என,வேளாண் பல்கலை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை