இந்த வாரம் முழுக்க மழை
கோவை; கோவை மாவட்டத்தில், வரும் 5ம் தேதி வரை மேகமூட்டமும், லேசான மழையும் இருக்கும் என, வேளாண் பல்கலை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இன்று முதல் வரும் 3ம் தேதி வரை, பொதுவாக வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஆங்காங்கு லேசான மழைப்பொழிவு இருக்கும். வரும் 4, 5ம் தேதிகளில் மழைப்பொழிவு இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.