உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அத்திக்கடவு நீர் வந்து ஆறு மாதம் ஆச்சு

அத்திக்கடவு நீர் வந்து ஆறு மாதம் ஆச்சு

கோவில்பாளையம்; கோவில்பாளையம் அருகே 135 ஏக்கர் பரப்பளவு உள்ள காளிங்கராயன் குளம் உள்ளது.இந்த குளம் அத்திக்கடவு அவிநாசி திட்டத்தில் சேர்க்கப்பட்டு ஓ.எம்.எஸ்., கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. எனினும் சோதனை ஓட்டம் நடத்தப்பட்ட போது மட்டும் இந்த குளத்திற்கு தண்ணீர் வந்தது. அதன் பிறகு கடந்த ஆறு மாதங்களாக தண்ணீர் வரவில்லை.அன்னூர் பகுதியில் உள்ள வேறு குளங்களுக்கு 50க்கும் மேற்பட்ட முறை தண்ணீர் வந்துள்ளது. ஆனால் இந்த குளத்தில் பதிக்கப்பட்ட குழாய்கள் சரியில்லாமல் குளத்திற்கு தண்ணீர் வருவதில்லை என கொண்டையம் பாளையம் மக்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ