உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மகா பைரவர் கோவிலில் ஜென்மாஷ்டமி விழா

மகா பைரவர் கோவிலில் ஜென்மாஷ்டமி விழா

அன்னுார்: திம்மநாயக்கன்புதுார் மகா பைரவர் கோவிலில், நாளை ஜென்மாஷ்டமி விழா நடக்கிறது. அன்னுாரில் இருந்து மொண்டிபாளையம் செல்லும் வழியில், திம்மநாயக்கன்புதுாரில் பைரவருக்கு என தனி கோவில் அமைந்துள்ளது. இங்கு தேய்பிறை அஷ்டமியில் சிறப்பு வழிபாடு நடக்கிறது. ஐப்பசி மாத அஷ்டமி ஜென்மாஷ்டமியாக கொண்டாடப்படுகிறது. நாளை, ஜென்மாஷ்டமி விழாவில், இரவு 7:00 மணிக்கு சிவ கைலாய வாத்தியம், 7:30க்கு சிறப்பு வேள்வி பூஜை, கோபூஜை, அஸ்வ பூஜை ஸ்வான பூஜை நடக்கின்றன. 1008 லிட்டர் பன்னீரால் அபிஷேகம் செய்யப்படுகிறது. அன்னதானம் வழங்கப்படுகிறது. விழாவில் பங்கேற்று இறையருள் பெற நிர்வாகிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ