இந்திய கலாசாரத்துடன் பெரிதும் ஒன்றியுள்ளது ஜப்பான் கலாசாரம்
கோவை: ''ஜப்பானிய கலாசாரம் இந்திய கலாசாரத்துடன் பெரிதும் ஒன்றியுள்ளது,'' என, ஜப்பானிய துாதரக கலாசாரம், தகவல் துறைக்கான ஆலோசகர் மமி டெரவோகா கூறினார்.ஸ்ரீ ஈஸ்வர் கல்லுாரிக்கு வந்த ஜப்பானிய துாதரக கலாசாரம், தகவல் துறைக்கான ஆலோசகர் மமி டெரவோகா மாணவர்கள், ஆசிரியர்களுடன் கலைந்துரையாடினார்.நிகழ்ச்சியில் அவர் பேசுகையில்,''ஜப்பானில் மாணவர்களுக்கு உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்புகள் ஏராளமாக உள்ளன. அதற்காக பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகின்றன. ஜப்பானிய கலாசாரம், இந்திய கலாச்சாரத்துடன் பெரிதும் ஒன்றியுள்ளது,'' என்றார்.கல்லுாரி இயக்குனர் ராஜாராம், தொழில்துறை மற்றும் பன்னாட்டு உறவுக்கான டீன் கண்ணன் நரசிம்மன், பன்னாட்டு உறவுக்கான உதவி இயக்குனர் கார்த்திகேயன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.