உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஆஞ்சநேயர் கோவிலில் ஜெயந்தி விழா

ஆஞ்சநேயர் கோவிலில் ஜெயந்தி விழா

சூலுார்: பெரிய குயிலி கீதா பஜன் ஆஞ்சநேயர் கோவிலில், 30ம் தேதி ஜெயந்தி விழா நடக்கிறது.சூலுார் அடுத்த பெரிய குயிலியில் கீதா பஜன் ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இங்கு, ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா, ஐந்து நாட்கள் நடக்கிறது. 28ம் தேதி, காலை, 7:00 மணிக்கு கணபதி ஹோமத்துடன் விழா துவங்குகிறது. வரும் 30ம் தேதி ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா நடக்கிறது. ஜன., 1 வரை தினமும் காலை,7:00 மணிக்கு, ஆஞ்சநேய சுவாமிக்கு அபிஷேக, அலங்கார பூஜை நடக்கிறது.தினமும் காலை, 10:00 மணிக்கு நாம சங்கீர்த்தனம், மாலை, வள்ளி கும்மி நிகழ்ச்சி நடக்கிறது. இதில், பல்வேறு பகுதிகளை சேர்ந்த குழுவினர் பங்கேற்க உள்ளனர். ஸ்ரீ நாராயண ராமானுஜ ஜீயர் ஆசியுரை வழங்க உள்ளார்.விழா ஏற்பாடுகளை கீதா பஜன் அறக்கட்டளையினர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை