உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  ஜெ.சி.டி. கல்லுாரியில் நடந்த கணினி அறிவியல் கருத்தரங்கு

 ஜெ.சி.டி. கல்லுாரியில் நடந்த கணினி அறிவியல் கருத்தரங்கு

கோவை: பிச்சனுார், ஜெ.சி.டி. கலை மற்றும் அறிவியல் கல்லுாரியின் கணினி அறிவியல் துறை சார்பில், 'கணினி அறிவியல் மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள்' குறித்த முதலாவது தேசிய அளவிலான கருத்தரங்கு, கல்லுாரி வளாகத்தில் நடந்தது. சிறப்பு விருந்தினராக பங்கேற்ற காக்னிசன்ட் நிறுவனத்தின் குழுத் தலைவர் பொன்சுதாகர், மாணவர்களிடையே தொழில்நுட்பத் திறன் மேம்பாடு மற்றும் மென்திறன்களின் அவசியம் குறித்து உரையாற்றினார். தொழில்நுட்ப அமர்வுகளில் பல்வேறு கல்லுாரி மாணவர்கள் ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பித்தனர். பி.எஸ்.ஜி.ஆர். கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லுாரி மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளுக்கு சிறந்த பங்களிப்பிற்காக விருதுகள் வழங்கப்பட்டன. சிலம்பத்தில் தமிழகளவில் தங்கம் வென்ற இரண்டாமாண்டு மாணவர் கவுதம்குமார், உடற்கல்வி இயக்குனர் செந்தில்குமார் ஆகியோர் கவுரவிக்கப்பட்டனர். ஜெ.சி.டி. கல்வி நிறுவனங்களின் மூத்த முதல்வர் மனோகரன், கல்லுாரி முதல்வர் அன்பரசு, கணினி அறிவியல் துறைத் தலைவர் சஜிதா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை