மேலும் செய்திகள்
முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வரவேற்பு விழா
11-Sep-2024
கோவை : கோவை, பிச்சனுார் ஜெ.சி.டி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரியில், முதலாமாண்டு மாணவர்களுக்கு வரவேற்பு மற்றும் ஜெ.சி.டி., - ஐ.ஏ.எஸ்., அகாடமி துவக்க விழா நடந்தது. இந்நிகழ்வில், வருமான வரி கமிஷனர் நந்தகுமார் தலைமைவகித்து நிகழ்ச்சியை துவக்கிவைத்தார். மேலும், பொறியியலில் பல்வேறு துறைகளின் முக்கியத்துவம் குறித்தும், வேலைவாய்ப்புகளுக்கு தனித்திறன்கள் மேம்படுத்திக்கொள்வதன் அவசியம் குறித்தும் விளக்கமளித்தார். ஜெ.சி.டி., கல்வி நிறுவனங்களின் கீழ் மாணவர்கள் போட்டித்தேர்வுகளில் வெற்றி பெறவும், பயிற்சிகள் தொடர்ந்து அளிக்கப்படவுள்ளது.இந்நிகழ்வில், ஜெ.சி.டி., கல்வி, சுகாதாரம் மற்றும் தொண்டு அறக்கட்டளை செயலாளர் துர்கா சங்கர், ரென்ட்லி சாப்ட்வேர் டெவெலப்மென்ட் ப்ரைவேட் லிமிடெட் நிறுவன நிர்வாக இயக்குனர் பிஜோய் சிவன்,கோவை காக்னிசன்ட் டெக்னாலஜி சொல்யூஷன்ஸ் இணை துணைத் தலைவர் கிருஷ்ணகுமார் மேனன், கல்லுாரியின் முதல்வர் மனோகரன், அனைத்து துறை தலைவர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
11-Sep-2024