உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அதிவேகத்தில் இயக்கப்படும் ஜீப்கள்

அதிவேகத்தில் இயக்கப்படும் ஜீப்கள்

அன்னுார், ; ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தில் அதிக அளவில் பூக்கள் பயிரிடப்படுகின்றன. அங்குள்ள தோட்டங்களில் இருந்தும், மொத்த விற்பனை மார்க்கெட்டில் இருந்தும் பூக்கள் எடுத்து கோவைக்கு தினமும் ஜீப்களில் கொண்டு செல்கின்றனர். 'விரைவில் கோவைக்கு செல்ல வேண்டும்,' என்பதற்காக இந்த ஜீப்கள் அசுரவேகத்தில் இயக்கப்படுகின்றன. இது குறித்து அந்த பகுதி மக்கள் கூறுகையில், இந்த ஜீப்களால் கோவை-சத்தி சாலையில் அடிக்கடி விபத்து நடக்கிறது. போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், தினமும் பள்ளி கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள், வாகன ஓட்டிகள் கோவை-சத்தி சாலையில் அச்சத்துடனே செல்ல வேண்டி உள்ளது.' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி