உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / நகை மதிப்பீட்டாளர் சங்க கலந்துரையாடல் நிகழ்ச்சி

நகை மதிப்பீட்டாளர் சங்க கலந்துரையாடல் நிகழ்ச்சி

கோவை; ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள நகைக் கடன் விதிமுறைகளை, நகை மதிப்பீட்டாளர்கள் கையாளும் விதம் குறித்து, கலந்துரையாடல் கூட்டத்தில் விளக்கப்பட்டது.கோவை, நீலகிரி மண்டல, கனரா வங்கியின் நகை மதிப்பீட்டாளர்கள் சங்க கலந்துரையாடல் நிகழ்ச்சி, குஜராத் சமாஜில் நடந்தது. மாநில தலைவர் பாஸ்கரன், பொது செயலாளர் சரவணன் ஆகியோர் முன்னிலையில் கூட்டம் நடந்தது. இதில், ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள நகைக் கடன் விதிமுறைகளை, நகை மதிப்பீட்டாளர்கள் கையாளும் விதம் குறித்து விளக்கப்பட்டது.அடகு வைக்கும் போது, போலி நகைகளை கண்டறிவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மற்ற தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளை விட, கனரா வங்கியில், நகை மதிப்பீட்டாளர்களுக்கு கமிஷன் தொகை குறைவாக உள்ளது. இதை அதிகப்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.தலைவர் ஸ்ரீ ரங்கராஜ், செயலாளர் விஜயகுமார், பொருளாளர் அருண் பிரகாஷ் உட்பட, 70க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி