உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஜார்கண்ட் வாலிபர் கொலை: தொழிலாளிக்கு ஆயுள் சிறை

ஜார்கண்ட் வாலிபர் கொலை: தொழிலாளிக்கு ஆயுள் சிறை

கோவை: கோவை அருகே ஒத்தகால்மண்டபத்திலுள்ள ஒரு டெக்ஸ்டைல் மில்லில், ஜார்கண்டை சேர்ந்த ராகேஸ்குமார்,25, சத்தீஸ்கரை சேர்ந்த சுதாம்தாண்டி,23, ஆகியோர் தொழிலாளியாக வேலை செய்து வந்தனர். மில் வளாகத்திலுள்ள தனித்தனி அறையில் தங்கியிருந்தனர். அப்போது இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் ராகேஸ்குமாரை கொலை செய்ய, சுதாம்தாண்டி திட்டமிட்டுள்ளார். இதற்காக கத்தி வாங்கி, அறையில் மறைத்து வைத்துள்ளார். 2024, பிப்.,16ல், ராகேஸ்குமாரை மது குடிக்க போகலாம் என்று கூறி, சுதாம்தாண்டி அழைத்து சென்றுள்ளார். இருவரும் மது குடித்துகொண்டிருந்த போது, கத்தியால்குத்தி ராகேஸ்குமாரை கொலை செய்து விட்டு, சுதாம்தாண்டி தப்பினார். செட்டிபாளையம் போலீசார் விசாரித்து, சுதாம்தாண்டியை கைது செய்தனர். அவர் மீது கோவை முதலாவது கூடுதல் செஷன்ஸ் கோர்ட்டில், வழக்கு தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடந்து வந்தது. விசாரணை முடிந்ததை தொடர்ந்து, குற்றம்சாட்டப்பட்ட சுதாம்தாண்டிக்கு ஆயுள்சிறை, 5,000 ரூபாய் அபராதம் விதித்து, நீதிபதி சசிரேகா நேற்று தீர்ப்பளித்தார். அரசு தரப்பில் வக்கீல் சிவராமகிருஷ்ணன் ஆஜரானார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி