மேலும் செய்திகள்
கொங்கு பாலிடெக்னிக்கில்பணி நியமன ஆணை வழங்கல்
16-Apr-2025
போத்தனூர்: மத்திய அரசு துறைகளில் பணிபுரிய தேர்ந்தெடுக்கப்பட்டோருக்கு, நியமன ஆணை வழங்கும் விழா நடந்தது.நாடு முழுவதும் வருமான வரி, ரயில்வே, வங்கி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் வேலைவாய்ப்பு பெற்ற, 51 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு பணி நியமன ஆணை வழங்கும் விழாவை பிரதமர் நரேந்திர மோடி, நேற்று டில்லியில் காணொலி வாயிலாக துவக்கி வைத்தார். 47 இடங்களில் இவ்விழா நடந்தது.கோவை, கிருஷ்ணா கல்லூரி அரங்கில் நடந்த இவ்விழாவில், கோவை வருமான வரித்துறை தலைமை கமிஷனர் அருண் சி பரத் பேசுகையில், அரசு துறையில் பணியாற்றும் வாய்ப்பு பெற்றவர்கள், நாட்டின் முன்னேற்த்தை கருத்தில்கொண்டும், மக்களுக்காகவும் பணியாற்ற வேண்டும்,'' என்றார்.முன்னதாக, கோவை வருமான வரித்துறை முதன்மை கமிஷனர் திவாகர் பிரசாத் வரவேற்றார். தொடர்ந்து, 143 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.
16-Apr-2025