பிக்கி புளோ பஜார் கண்காட்சியில் ஜோர்
கோவை : இந்திய தொழில் வர்த்தக சபை அமைப்பின், மகளிர் அமைப்பான பிக்கி புளோவின் தலைவர் அபர்ணா சுங்குவின் தலைமையின் கீழ், இயங்கி வரும் கோவை பிக்கி புளோ சார்பில், சிறப்பு கண்காட்சி நடந்தது. கோவை கலெக்டர் பவன்குமார், ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார். தனித்துவமிக்க வாழ்வியல் முறை குறித்த 10வது பதிப்பான, புளோ பஜார் 2025 கண்காட்சி மற்றும் விற்பனை அவிநாசி ரோடு, சுகுணா திருமண மண்டபத்தில் இரண்டு நாள் நடந்தது. இதில், கோவை மற்றும் அதை சுற்றியுள்ள மாவட்டங்களைச் சேர்ந்த கிராமப்புற மற்றும் மகளிர் தொழில் முனைவோர், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் பங்கேற்றன. இவர்களுக்காக, பிக்கி புளோ 40 அரங்குகளை இலவசமாக அளித்திருந்தது. ஆடைகள், ஆபரணங்கள் வீட்டு அலங்கார பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. மகளிர் மேம்பாட்டுக்கு அனைத்து வகையிலும் உதவி வரும், ஐயானா டயமண்ட்ஸ் கண்காட்சிக்கு பொறுப்பேற்று நடத்தியதாக, பிக்கி புளோ கோவை கிளையின் முன்னாள் தலைவர் சுகுணா தெரிவித்தார்.