மேலும் செய்திகள்
எஸ்.டி.ஏ.டி., மாணவர்கள் சாதனை
12-Jan-2025
பொள்ளாச்சி; பொள்ளாச்சி சரஸ்வதி தியாகராஜா கல்லுாரி மாணவர்கள், தேசிய ஜூனியர் பூப்பந்து போட்டியில், வெள்ளி பதக்கம் வென்றனர்.மஹாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில், 69வது தேசிய ஜூனியர் பூப்பந்து போட்டிகள் நடைபெற்றன. அதில், தமிழக அணிக்கு தேர்வு செய்யப்பட்ட, பொள்ளாச்சி சரஸ்வதி தியாகராஜா கல்லுாரி மாணவர்கள் பிரேம்குமார், சஞ்சய் ஆகியோர் அடங்கிய தமிழக அணியினர் விளையாடி வெள்ளி பதக்கம் வென்றனர்.வெற்றி பெற்ற மாணவர்களை, கல்லுாரியின் தலைவர் சேதுபதி, துணை தலைவர் வெங்கடேஷ், செயலர் விஜயமோகன், முதல்வர் வனிதாமணி, உடற்கல்வி இயக்குனர் பாரதி ஆகியோர் பாராட்டினர்.
12-Jan-2025