உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கபடி போட்டி: சிறுமுகை அரசு பள்ளி முதலிடம்

கபடி போட்டி: சிறுமுகை அரசு பள்ளி முதலிடம்

மேட்டுப்பாளையம்; பள்ளிகளுக்கு இடையிலான விளையாட்டுப் போட்டிகளில், கபடியில் சிறுமுகை அரசு மேல்நிலைப்பள்ளியும், கைப்பந்து போட்டியில் மேட்டுப்பாளையம் நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியும் முதலிடம் பெற்றன. மேட்டுப்பாளையம் அருகே உள்ள ஸ்ரீ குமரன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், முன்னாள் தாளாளர் துரைசாமியின் நினைவாக, பள்ளிகளுக்கு இடையிலான விளையாட்டுப் போட்டிகள் நடந்தன. இதில், 20 க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளிகள் பங்கேற்றன. ஆண்களுக்கான கபடி போட்டியில், 4 குழுக்களும், ஆண்கள் மற்றும் பெண்களுக்கான கைப்பந்து போட்டியில், 11 குழுக்களும், பெண்களுக்கான கோ கோ போட்டியில், ஐந்து குழுக்களும் பங்கேற்றனர். ஆண்களுக்கான கைப்பந்து போட்டியில், கீழ் கோத்தகிரி அரசு மேல்நிலைப்பள்ளி முதலிடத்தையும், கோத்தகிரி அரசு மேல்நிலைப்பள்ளி இரண்டாம் இடத்தையும் பெற்றது. கபடி போட்டியில் சிறுமுகை அரசு மேல்நிலைப்பள்ளி முதலிடத்தையும், தென்பொன்முடி ஈஸ்வரி அம்மாள் பத்திரப்பா அரசு மேல்நிலைப்பள்ளி இரண்டாம் இடத்தையும் பெற்றது. பெண்களுக்கான கைப்பந்து போட்டியில், மேட்டுப்பாளையம் நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி முதலிடத்தையும், தென் பொன்முடி அரசு மேல்நிலைப்பள்ளி இரண்டாம் இடத்தையும் பெற்றது. பெண்களுக்கான கோ கோ போட்டியில், பெத்திக்குட்டை அரசு மேல்நிலைப்பள்ளி முதலிடத்தையும், நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி இரண்டாம் இடத்தையும் பெற்றது. வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு குமரன் கல்லூரி முதல்வர் சுகுணா கோப்பைகளையும், பதக்கங்களையும் வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை