மாநில போட்டியில் பங்கேற்ற கபடி வீரர்களுக்கு பாராட்டு
கோவை: மாநில அளவிலான முதல்வர் கபடி போட்டியில், புனித மைக்கேல் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் மூவர் பங்கேற்றனர். கோவையில், 19 வயதுக்கு உட்பட்ட மாவட்ட அளவிலான, தமிழ்நாடு முதல்வர் கோப்பை கபடி போட்டி, கற்பகம் பல்கலையில் நடந்தது. இறுதிப் போட்டியில், பெரியகடை வீதியில் உள்ள புனித மைக்கேல் மேல்நிலைப் பள்ளி அணியும், மதுக்கரை மார்க்கெட் கலைவாணி மாடல் பள்ளி அணியும் மோதின. புனித மைக்கேல் பள்ளி அணி வெற்றி பெற்றது. அணியின் முகமது பர்கான், முகமது நிகாத், பாசில் ரஹ்மான் ஆகியோர், மாநில அளவிலான போட்டியில் பங்கேற்றனர். மாவட்ட அளவிலான இறுதிப் போட்டியில் வென்றவர்களையும், மாநில அளவில் பங்கேற்ற மூவரையும், கோவை மறை மாவட்ட முதன்மை குரு ஜான் ஜோசப் ஸ்தனிஸ், தாளாளர் மெல்கியோர், தலைமை ஆசிரியர் ஆல்பர்ட் சகாய இருதயராஜ், உதவி தலைமை ஆசிரியர்கள் நோயல், ரிச்சட் பிரபு, பாக்கியநாதன், உடற்கல்வி ஆசிரியர்கள் மனோஜ், ஹென்றி, லாரன்ஸ் கில்சன் ஆகியோர் பாராட்டினர்.