உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கபடி அணிக்கு வெள்ளி பதக்கம்; சூலுார் மாணவிகள் அசத்தல்

கபடி அணிக்கு வெள்ளி பதக்கம்; சூலுார் மாணவிகள் அசத்தல்

சூலுார்; சூலுார் அரசு பள்ளி மாணவிகள், பங்கேற்று விளையாடிய, தமிழக கபடி அணி வெள்ளி பதக்கம் வென்றது.சூலுார் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் படிக்கும், 12ம் வகுப்பு மாணவி ஹனிஷ்கா, 11ம் வகுப்பு மாணவி சாதனா ஆகியோர், 17 வயதுக்கு உட்பட்ட, தமிழக பெண்கள் கபடி அணியில் பங்கேற்று விளையாட தேர்வு பெற்றிருந்தனர். மத்திய பிரதேச மாநிலம் நரசிங்பூரில் நடந்த தேசிய அளவிலான கபடி போட்டியில், தமிழக அணிக்காக இருவரும் விளையாடினர். அதில், தமிழக அணி வெள்ளி பதக்கம் வென்றது. வெள்ளி பதக்கம் வென்ற இரு மாணவிகளை, பள்ளி தலைமையாசிரியர் கீதா, ஆசிரியைகள் மற்றும் பயிற்சியாளர்கள், பொதுமக்கள் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !