கச்சியப்பர் மடாலய சூரசம்ஹார விழா
போத்தனூர்: ஈச்சனாரியிலுள்ள கச்சியப்பர் மடாலயத்தில் (திருச்செந்தில் கோட்டம்), நேற்று காலை சூரசம்ஹார வேள்வி நடந்தது. தேவர்களையும் கொடுமைப்படுத்திய கஜமுகன், சிங்கமுகன், தாரகாசுரன், சூரபத்ரன் ஆகியோரை வதம் செய்யும் நிகழ்ச்சி, கணபதி வழிபாட்டுடன் மாலையில் நடந்தது. திரளானோர் நிகழ்ச்சியை, பக்தி பரவசம் மேலோங்க, அரோகரா கோஷத்துடன் கண்டுகளித்தனர். இன்று காலை, 10:00 மணிக்கு வள்ளி, தெய்வானை உடனமர் சுப்ரமணிய சுவாமிக்கு திருக்கல்யாணமும், மதியம் அலங்கார பூஜை, அன்னதானம் நடக்கின்றன. நாளை காலை, 11:00 மணிக்கு மஞ்சள் நீர், மறுபூஜையுடன் விழா நிறைவடைகிறது. ஏற்பாடுகளை திருவிழா குழுவினர் செய்திருந்தனர்.