காலபைரவர் கோவில் நிலம் ஏலம் விட்டாச்சு!
கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு, குருநல்லிபாளையம் காலபைரவர் கோவில் நிலம் ஏலம் விடப்பட்டது.கிணத்துக்கடவு, குருநல்லிபாளையத்தில் காலபைரவர் கோவில், ஹிந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. கோவிலுக்கு, 25.45 ஏக்கர் நிலம் உள்ளது. கடந்த மார்ச் மாதம் ஏற்பட்ட பிரச்னையில், கோவில் பூட்டப்பட்டது.இதை தொடர்ந்து, கிணத்துக்கடவு தாலுகா அலுவலக வளாகக்தில், அமைதிக்குழு ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. கோவிலுக்கு புதிதாக அறநிலையத்துறை சார்பில் பூஜாரி நியமிக்கப்பட்டார். தற்போது, இந்த கோவில் நிலம் பொதுமக்கள் முன்னிலையில், மூன்று ஆண்டுகளுக்கு ஏலம் விடப்பட்டது.இதில், கோவில் அறங்காவலர் ராஜு, கிணத்துக்கடவு அறநிலையத்துறை இன்ஸ்பெக்டர் கீதா, சிறப்பு பணி அலுவலர்களாக, பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் செயல் அலுவலர் சீனிவாச சம்பத், சூலக்கல் மாரியம்மன் கோவில் செயல் அலுவலர் கந்தசாமி, கோவில் பணியாளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.கோவில் நிலத்தை முதலாம் ஆண்டுக்கு, 67,171 ரூபாய்க்கு, 5 நபர்கள் ஏலம் எடுத்தனர். மேலும், இரண்டு மற்றும் மூன்றாம் ஆண்டுக்கு, தற்போது ஏலம் எடுத்த தொகையில் இருந்து, ஒவ்வொரு ஆண்டும் 10 சதவீதம் வீதம் அதிகமாக செலுத்த வேண்டும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.