உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / களம் இலக்கிய அமைப்பின் நுால்கள் அறிமுக கூட்டம்

களம் இலக்கிய அமைப்பின் நுால்கள் அறிமுக கூட்டம்

கோவை,; கோவையில் களம் இலக்கிய அமைப்பு சார்பில், நுால்கள் அறிமுக கூட்டம், காந்திபார்க் அருகில் உள்ள மாரண்ணகவுடர் பள்ளி அரங்கில் நேற்று நடந்தது.நிகழ்ச்சிக்கு, கவிஞர் அறிவன் தலைமை வகித்தார். இந்த நிகழ்ச்சியில், எழுத்தாளர் நேமிசந்த்ராவின் 'யாத்வஷேம்' என்ற கன்னட மொழிபெயர்ப்பு நாவல், இவான் டெனிசோவிச்சின் 'வாழ்வில் ஒருநாள்' என்ற ரஷ்ய மொழிபெயர்ப்பு நாவல் அறிமுகம் செய்யப்பட்டது.நேமிசந்த்ராவின் 'யாத்வஷேம்' என்ற கன்னட மொழிபெயர்ப்பு நாவல் குறித்து, எழுத்தாளர் ஜோதிமணி பேசியதாவது:இரண்டாம் உலகப்போர் காலத்தில், ஜெர்மனியில் இருந்து நாசிப்படைகளுக்கு பயந்து, உலகம் முழுவதும் பல நாடுகளில், யூதர்கள் தஞ்சம் அடைந்தனர். அப்படி வந்தவர்களில் ஒரு யூத குடும்பத்தினர், இந்தியாவில் உள்ள கர்நாடக மாநிலம் பெங்களூருவில் தஞ்சம் அடைந்தனர். அவர்களின் துயர வாழ்க்கையை இந்த நாவல் விளக்குகிறது.ஆங்கிலத்தில் இருந்து கன்னடத்துக்கு மொழிபெயர்க்கப்பட்டு, அந்த மொழிக்கான சாகித்ய அகாடமி விருதும் நுாலுக்கு கிடைத்துள்ளது. கன்னடத்தில் இருந்து இப்போது, தமிழில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. இந்த நாவலில் யூதர்களின் வாழ்வும், வலியும் வெளிப்படுகிறது.இவ்வாறு, அவர் பேசினார்.பேராசிரியர் கோகுல் பிரியன், 'வாழ்வில் ஒருநாள்' நாவல் குறித்து கருத்துரை வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !