கால காலேஸ்வரர் கோயிலில் நாளை கந்த சஷ்டி விழா
கோவில்பாளையம்: கொங்கு நாட்டு திருக்கடையூர் என்று அழைக்கப்படும், கோவில்பாளையம் கால காலேஸ்வரர் கோயிலில், முருகப்பெருமான் சன்னதியில், கந்த சஷ்டி விழா கடந்த 22ம் தேதி காப்பு கட்டுதலுடன் துவங்கியது. இதையடுத்து கொடியேற்றம் நடந்தது. கடந்த மூன்று நாட்களாக, தினமும் காலையில் முருகப்பெருமானுக்கு, அபிஷேக பூஜை, அலங்கார பூஜை நடந்தது. நாளை (27ம் தேதி) மாலை 5:00 மணிக்கு சூரசம்ஹார நிகழ்ச்சி நடை பெறுகிறது. வரும் 28ம் தேதி காலை 8:00 மணிக்கு வள்ளி தெய்வானை திருக்கல்யாணம் நடக்கிறது. மதியம் 12:00 மணிக்கு, மயில் வாகனத்தில் சுவாமி திருவீதி உலா நடைபெறுகிறது. விழாவில் பங்கேற்று இறையருள் பெற, அறங்காவலர் குழுவினர் அழைப்பு விடுத்துள்ளனர்.