உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சிலம்ப போட்டியில் கந்தசாமி பள்ளி வெற்றி

சிலம்ப போட்டியில் கந்தசாமி பள்ளி வெற்றி

பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே, கணபதிபாளையம் கந்தசாமி மெட்ரிக் பள்ளி மாணவர்கள், மாநில அளவிலான சிலம்ப போட்டியில் வெற்றி பெற்றனர். பிரபஞ்சம் சிலம்பம் மற்றும் களரி அகாடமி, பவர் சோட்டக்கான கராத்தே சார்பில் மாநில அளவிலான சிலம்ப போட்டி, உடுமலை அருகே ஏரிப்பாளையம் தனியார் மஹாலில் நடந்தது. அதில், கணபதிபாளையம் கந்தசாமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர் பங்கேற்றனர். ஒன்பது முதல், 10 வயதுக்கு உட்பட்ட பிரிவில் மாணவி நவயுவின்சினி, 12 - 13வயதுக்கு உட்பட்ட பிரிவில் மாணவர் யுவன்ஸ்ரீ ஆகியோர் முதலிடம் பெற்றனர். 11 முதல் 12வயதுக்கு உட்பட்ட பிரிவில் மாணவர் முகிலன், மாணவி மாளதிகா, இரண்டாமிடமும்; 12 - 13 வயதுக்கு உட்பட்ட பிரிவில், சிவசக்தி, லக் ஷிதா, சஷ்டிகாஸ்ரீ ஆகியோர் மூன்றாமிடத்தை பிடித்தனர். போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்கள் தேசிய அளவில் நடைபெறும் சிலம்ப போட்டிக்கு தகுதி பெற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களை, பள்ளி தாளாளர் சண்முகம், செயலர் உமாமகேஸ்வரி, ஒருங்கிணைப்பாளர் ரவிச்சந்திரன், சிலம்ப ஆசிரியர்கள் சாமிக்கண்ணு, கணேஷ்குமார், ஆசிரியர்கள் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி