மேலும் செய்திகள்
திறமைகளை வெளிப்படுத்தி மாணவர்கள் அரையிறுதிக்கு தகுதி
18 hour(s) ago
இளநீர் விலையில் மாற்றமில்லை
18 hour(s) ago
சாலை விபத்தில் பள்ளி மாணவன் பலி
18 hour(s) ago
யூனியன் வங்கி ஊழியர்கள் சங்க வெள்ளி விழா மாநாடு
18 hour(s) ago
கோவை:தேர்தலுக்கு முன் அனைத்து தரப்பினரது கோரிக்கைகளையும் சேர்த்து, 'நிறைவேற்றுவோம்' என்பதை சேர்த்து வாக்குறுதிகளாக மாற்றுகின்றன கட்சிகள். இதில், ஆளும் கட்சியான தி.மு.க.,வும் தேர்தல் அறிக்கையை தயார் செய்து வருகிறது. இவரை சந்தித்து, தொழில் துறையினரது கோரிக்கையை, டேக்ட் அமைப்பின் தலைவர் ஜேம்ஸ் முன்வைத்தார். அவர் அளித்த மனுவில், சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு மின் கட்டணத்தில் நிலைக்கட்டணத்தை குறைக்க வேண்டும். பீக் அவர் கட்டணத்தை கைவிட வேண்டும். சோலார் நெட்வொர்க் கட்டணத்தை குறைக்க வேண்டும். இயந்திரங்கள் வாங்க உடனடியாக மானியம் வழங்க வேண்டும். சர்பாஸ் சட்டத்தின் கால அளவை மாற்ற வேண்டும். குறு, சிறு தொழில்களுக்கு ஜி.எஸ்.டி., வரி விதிப்பை 5 சதவீதத்திற்குள் வைக்க வேண்டும், என குறிப்பிட்டிருந்தார். ஜேம்ஸ் கூறுகையில், இந்த கோரிக்கைகளை தற்போதுள்ள அரசு, தேர்தலுக்கு முன்பாகவே நிறைவேற்ற முடியும். மத்திய அரசின் கவனத்திற்கும் கொண்டு செல்ல முடியும். சட்டசபை தொடருக்கு பின், முதல்வருடன் சந்தித்து பேச, வாய்ப்பு ஏற்படுத்தி தருவதாக, கனிமொழி தெரிவித்துள்ளார். காத்திருக்கிறோம், என்றார்.
18 hour(s) ago
18 hour(s) ago
18 hour(s) ago
18 hour(s) ago