உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கர்லா கட்டை விளையாட்டு சங்கம்

கர்லா கட்டை விளையாட்டு சங்கம்

கோவை: வடவள்ளி பொம்மணம்பாளையத்தில் இயங்கி வரும், தி அத்யாயனா இன்டர்நேஷனல் பப்ளிக் பள்ளியில், மாவட்ட கர்லா கட்டை விளையாட்டு சங்கம், தொடக்க விழா நடந்தது. மாவட்ட கர்லா கட்டை சங்க தலைவராக, தி அத்யாயனா பள்ளி' இயக்குநர் ஆனந்த் கிருஷ்ணன் தேர்வு செய்யப்பட்டார். துணை தலைவராக முருகானந்தம், பொருளாளராக ரமேஷ் குமார், செயலராக ரவிக்குமார், விளையாட்டு இயக்குநராக தென்னரசு, கழகத்தின் ஒருங்கிணைப்பாளராக, சின்னுசாமி தேர்வு செய்யப்பட்டனர். கர்லா கட்டை போட்டிகளை நடத்தி, மாவட்ட பள்ளி, கல்லுாரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடம், கர்லா கட்டை பயிற்சி வாயிலாக, உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை